Paristamil Navigation Paristamil advert login

AI அம்சங்களுடன் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்யும் Meta

AI அம்சங்களுடன் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்யும் Meta

18 புரட்டாசி 2025 வியாழன் 11:04 | பார்வைகள் : 129


Meta நிறுவனம் தனது புதிய Celeste ஸ்மார்ட் கண்ணாடியை Connect நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட முதல் augmented reality (AR) கண்ணாடியாகும்.

இந்த கண்ணாடியின் சிறப்பு அம்சங்களில், சிறிய டிஜிட்டல் திரை, நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்கள் போன்ற தகவல்களை காட்டும் வசதி, மற்றும் கை அசைவுகளால் கட்டுப்படுத்தக்கூடிய Wristband ஆகியவை அடங்கும்.

இதன் விலை சுமார் 800 டொலர் ஆகும். இது மெட்டாவின் முந்தைய Ray-Ban மற்றும் Oakley கண்ணாடிகளை விட அதிகம்.

மெட்டா நிறுவனம் AR மற்றும் AI தொழில்நுட்பங்களில் 2020 முதல் 60 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது.

Celeste கண்ணாடிகள் முழுமையான AR அனுபவம் தரவில்லை என்றாலும், பயனர்களுக்கு AR உலகத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை தரும்.

இத்திட்டம் டெவலப்பர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

மெட்டா, மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கான புதிய மென்பொருள் கருவிகளை வழங்கி AR பயன்பாடுகளை உருவாக்க ஊக்குவிக்கிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்