செல்சி அணியை நசுக்கிய ஹாரி கேன்! சாம்பியன் லீக்கில் பாயெர்ன் முனிச் மிரட்டல் வெற்றி

18 புரட்டாசி 2025 வியாழன் 11:04 | பார்வைகள் : 111
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தியது.
அல்லியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் செல்சி (Chelsea) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் செல்சி வீரர் ட்ரெவோஹ் சலோபஹ் சுயகோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து ஹாரி கேன் (27வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
அடுத்த 2 நிமிடங்களில் செல்சி வீரர் கோலே பால்மர் (Cole Palmer) கோல் அடித்தார். முதல் பாதியில் பாயெர்ன் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியின் 63வது நிமிடத்தில் ஹாரி கேன் (Harry Kane) மீண்டும் கோல் அடிக்க, பாயெர்ன் முனிச் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.