Paristamil Navigation Paristamil advert login

திராவிடம் குறித்து முதல்வரை விளக்கம் சொல்ல சொல்லுங்கள்: கேட்கிறார் சீமான்

திராவிடம் குறித்து முதல்வரை விளக்கம் சொல்ல சொல்லுங்கள்: கேட்கிறார் சீமான்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 06:41 | பார்வைகள் : 105


திராவிடம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: அதிகாரத்தை, 40 பார்லிமென்ட் உறுப்பினர்களை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் பிரச்னை குறித்து கடிதம் எழுதுகிறாராம். ஆப்பரேஷன் சிந்தூர் போரை ஆதரித்து பேரணி சென்ற ஸ்டாலின் காவேரி நீர் வேண்டி, ஒரு பெரிய பேரணி நடத்தி பெற்றுத் தரலாமே? முதலில் திராவிடம் என்றால் என்ன என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லட்டும்.

ஏற்கனவே அடிச்ச அடில இங்க நடக்கிற கல்யாணம் தான் திராவிடம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி கொண்டு இருக்கிறார். நான் சொல்கிறேன். திராவிடம் என்றால் தமிழர் அல்லாதோர் வசதியாகவும் , பாதுகாப்பாகவும் ஆள்வதற்கும் , வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டது திராவிடம்.

இதனை மறுப்பவர் யார்? எதிர்ப்பவர் யார்? தமிழக மக்கள் அரசியல் தெளிவு பெற்று ஓட்டளிக்காதவரை திராவிட கதைகளை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். தமிழகத்தில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்