இலங்கையில் மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை
18 ஐப்பசி 2025 சனி 10:25 | பார்வைகள் : 1027
இலங்கையில் அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan