Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் காதல் மோசடி - பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் காதல் மோசடி  -  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

17 ஐப்பசி 2025 வெள்ளி 17:46 | பார்வைகள் : 1214


பிரித்தானியாவில் காதல் மோசடிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாக கூறப்படுகின்றது.

குறித்த மோசடியால் £72,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்க வங்கிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாக நிதி நடத்தை ஆணையம் (FCA) குறிப்பிடுகிறது.

அதேசமயம் 2024/25 நிதியாண்டில் பிரித்தானியாவில் காதல் மோசடியால் £106 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக லண்டன் நகர காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஆண்டிற்கு 09 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் 11,222 பவுண்ட்ஸ் பணத்தை இழந்துள்ளனர். குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் வலைத்தளங்கள் மூலம் பெரும்பாலானவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

அதேசமயம்  FCA ஆல் மதிப்பிடப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காதல் மோசடி வழக்குகளில் தனிப்பட்ட இழப்புகள் £100 முதல் £428,249 வரை இருந்ததாக கூறப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்