Paristamil Navigation Paristamil advert login

மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகினாரா?

மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகினாரா?

17 ஐப்பசி 2025 வெள்ளி 15:32 | பார்வைகள் : 283


தமிழ் சினிமாவின் மிகவும் ‘ஃபிட்டான’ நடிகர்களில் விஷாலும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்தார். அவர் நடித்த ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கைகள் நடுங்கப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் அவர் உடல்நலம் சம்மந்தமாக பலவிதமானக் கருத்துகள் கிளம்பின.

இதற்கிடையில் அவர் சினிமா கேரியரும் தேக்க நிலையில் இருந்தது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘மத கஜ ராஜா’ ஆகிய இரு படங்களைத் தவிர வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.  இதனால் அவர் சினிமாவில் ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து குணமாகி அவர் ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளது. போஸ்டரில் விஷால் மூன்று விதமான கெட்டப்களில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இந்நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ரவி அரசுக்கும் விஷாலுக்கும் இடையே  கருத்து வேறுபாடு எழுந்து, படத்தில் இருந்து இயக்குனர் விலகிவிட்டதாக கருத்துகள் பரவின. அதை உறுதிப்படுத்துவது போல ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷால் சில காட்சிகளை இயக்குவது போன்ற வீடியோவும் வெளியானது. ஆனால் உண்மையில் ரவி அரசு தனது மனைவியின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத சூழல் உருவாக, ஆக்‌ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோக் காட்சிதான் இணையத்தில் பரவியதாம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்