இலங்கையில் உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

17 ஐப்பசி 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 144
இலங்கையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.