Paristamil Navigation Paristamil advert login

கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டெஸ்ட்20 போட்டிகள் - விதிமுறைகள் என்ன?

 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் டெஸ்ட்20 போட்டிகள் - விதிமுறைகள் என்ன?

17 ஐப்பசி 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 115


கிரிக்கெட்டில் புதிதாக டெஸ்ட்20 வடிவ போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் ஆரம்பகாலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒரு நாள் போட்டிகள், மற்றும் T20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், புதிதாக டெஸ்ட் ட்வென்டி (Test 20) என்ற புதிய வடிவ கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு தொழில்முனைவோரான கௌரவ் பஹிர்வானி இதனை உருவாக்கியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான்களான சர் கிளைவ் லாயிட், ஹர்பஜன் சிங், மேத்யூ ஹேடன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த புதிய வடிவ கிரிக்கெட்டை  அறிமுகம் செய்துள்ளனர்.

டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட், இந்தியா போன்ற பாரம்பரிய கிரிக்கெட் நாடுகளில் மட்டும் இன்றி, கிரிக்கெட் அறிமுகம் இல்லாத பிற நாடுகளிலும் உள்ள இளைஞர்களை கிரிக்கெட்டிற்கு ஈர்ப்பதே இதன் நோக்கம் என்று கௌரவ் பஹிர்வானி விளக்கினார்.

இந்த கிரிக்கெட் 13 முதல் 2026 ஆம் ஆண்டின் ஜனவரியில், இந்தியாவில் இந்த விளையாட்டின் முதல் தொடர் தொடங்கும் எனவும், பின்னர் படிப்படியாக பிற நாடுகளில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

இதில் இந்தியாவை சேர்ந்த 3 அணிகளும், துபாய், லண்டன், அமெரிக்க நகரத்தை சேர்ந்த 3 அணிகளும் உள்ளது. இதில், 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

தகுதியின் அடிப்படையில், முதல் 300 வீரர்களுக்கு ஏலத்தில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு அணி 16 வீரர்களை தேர்வு செய்யும். அதில் 8 இந்திய வீரர்கள் மற்றும் 8 சர்வதேச வீரர்கள் இடம்பெறுவார்கள்.

மீதமுள்ள வீரர்கள் வைல்ட் கார்டு அடிப்படையில், தொடரின் இடையே தேவைப்பட்டால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த டெஸ்ட்20 போட்டியானது வழக்கமான டெஸ்ட் போட்டிகளை போல் ஒரு அணி 2 இன்னிங்ஸ் விளையாடும். ஆனால் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்கள் மட்டுமே இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை போல் 5 நாட்கள் நடைபெறாமல், ஒரே நாளில் நடைபெறும்.

இதில், ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியில் ஒரு முறை 4 ஓவர்கள் பவர்பிளே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 75 ரன்கள் முன்னிலையுடன் ஃபாலோ-ஆனை அமல்படுத்த முடியும்.

போட்டியில் அதிகபட்சமாக 5 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம், ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வீச அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டியை பார்க்க 13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.    

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்