பாகிஸ்தான் இராணுவ முகாமில் தாக்குதல் - 7 வீரர்கள் பலி

17 ஐப்பசி 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 239
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஒரு இராணுவ முகாமில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை முகாமின் சுவரில் மோதியதாகவும் பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.