கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

16 ஐப்பசி 2025 வியாழன் 11:35 | பார்வைகள் : 139
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
விளையாட்டு பல்கலை குழுவில் நிதித்துறை செயலரை நியமிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை சட்ட திருத்த மசோதா - 2025, கடந்த ஏப்ரல் மாதம் 29ல் நிறைவேற்றப்பட்டது.
பின் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, கோப்புகளை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கவர்னர் முடிவெடுத்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், 'கவர்னரின் இந்த முடிவு அரசியல் சாசனத்தின் பிரிவு 200ஐ மீறும் வகையில் உள்ளது. எனவே, கவர்னரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டுள்ளது.