E85 விலையேற்றம் காண்கிறது..!!

15 ஐப்பசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 421
E85 வகை எரிபொருளின் விலை அதிகரிக்க உள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று Projet de loi de finances (PLF) அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் இந்த விலையேற்றமும் ஒன்றாகும்.
E85 என்பது 85% சதவீத ஈத்தனல் மற்றும் பெற்றோல் கலந்த வீரியம் குறைந்த ஒரு எரிபொருளாகும். €0.71 யூரோக்களுக்கு விற்பனையாகிக்கொண்டிருந்த இந்த எரிபொருள், €1.20 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. அதேவேளை, பொதுமக்களால் பெரியளவில் அறியப்படாத B100 'பயோ டீசல்' விலையும் அதிகரிக்கிறது.
நேற்று ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை Projet de loi de finances (PLF) பட்ஜெட் கொண்டுவரப்பட்டது. இந்த வாரத்தில் அது வாக்கெடுப்பு விடப்படும் அல்லது அரசாங்கம் 49.3 சட்டமூலத்தை பயன்படுத்தி நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.