Paristamil Navigation Paristamil advert login

மகப்பேறு விடுப்பு விடுப்புகள் நான்கு மாதங்கள் வரையா?

மகப்பேறு விடுப்பு விடுப்புகள் நான்கு மாதங்கள் வரையா?

14 ஐப்பசி 2025 செவ்வாய் 22:51 | பார்வைகள் : 573


2026ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு நிதி மசோதையில், ஒரு புதிய மகப்பேறு விடுப்பு (congé de naissance) முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம், தாய்மையும் தந்தையுமான பெற்றோர் இருவரும் தலா இரண்டு மாதங்கள் கூடுதல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். 

"ஒவ்வொரு பெற்றோரும் ஒரே நேரத்தில் அல்லது மாறி மாறி இந்தக் ழவிடுப்பை எடுத்துக்கொள்ளலாம். இதனால், அதிகபட்சமாக நான்கு மாதங்கள் பெற்றோர் தங்கள் குழந்தையுடன் இருக்க முடியும்" என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்த « réarmement démographique » திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது, தற்போதைய பெற்றோர் விடுப்பைவிட நல்ல இழப்பீட்டுடன் வழங்கப்படும் என அமைச்சர் ஓரோர் பெர்ஜே (Aurore Bergé) கூறியுள்ளார். தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள பெற்றோர் விடுப்பை மாற்றும் நோக்கில் இந்த புதிய மகப்பேறு விடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்