விற்பனைக்கு வந்த SFR சொத்துக்கள்! - போட்டிபோடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..!!

14 ஐப்பசி 2025 செவ்வாய் 22:55 | பார்வைகள் : 452
பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கிவரும் SFR நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அவற்றை வாங்குவதற்கு பிரான்சில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.
தொலைத்தொடர்பு துறையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து நஷ்ட்டத்தை எதிர்கொண்டுள்ள SFR, €17 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளது. இதில் 43% சதவீத சொத்துக்களை Bouygues குழுமமும், 30% சதவீத சொத்துக்களை Free நிறுவனத்தின் தாய் குழுமமான Iliad குழுமமும், ஏனைய 27% சதவீத சொத்துக்களை Orange நிறுவனமும் வாங்க உள்ளன.
நவீன தொழிழ்நுட்ப சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்குரிய முதலீடு இல்லை என்பதால், பாரிய வீழ்ச்சியை SFR நிறுவனம் சந்தித்துள்ளது. தற்போது அந்நிறுவனம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.