மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்

14 ஐப்பசி 2025 செவ்வாய் 17:31 | பார்வைகள் : 178
மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் 97 இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா (influenza) காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும்,
இது காய்ச்சல் மற்றும் குளிர், தும்மல், இருமல் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் influenza நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.