வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் - இல்-து-பிரான்ஸ் மக்கள்!!

14 ஐப்பசி 2025 செவ்வாய் 15:44 | பார்வைகள் : 1107
இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் வசிக்கும் மக்கள் மிக மோசமாக வீடுகளில் வசிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வீடற்றவர்களின் எண்ணிக்கையும், மிக குறைந்த வசதிகளுடன், தரமற்ற நெருக்கடியான வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 1.2 மில்லியன் மக்கள் அவ்வாறான வீடுகளில் வசிக்கின்றனர்.
அதேவேளை, தங்களது வருமானத்தில் 34% சதவீதத்தை வாடகையாக செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டினை விட்டு வெளியேறும் வயதெல்லையை இரண்டு வருடங்கள் வரை பிற்போடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள் வசிப்பவர்களில் சென்ற ஆண்டில் 2024 ஆம் ஆண்டில் 350,000 பேருக்க வாடகை செலுத்துவதில் சிக்கல் எழுந்து, பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.