கனடா பாடசாலையில் சர்ச்சை... பன்றி இறைச்சிக்கு தடை...

14 ஐப்பசி 2025 செவ்வாய் 12:59 | பார்வைகள் : 210
கனடாவில் பாடசாலை ஒன்றில், பன்றி இறைச்சியை (Ham Sandwich) மதிய உணவாக கொண்டு வரவேண்டாம் என பெற்றோரிடம் கேட்டதாக கூறும் டிக்-டாக் காணொளியொன்று வைரலானது.
இந்த காணொளியில், கல்கரி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் டேவிட் டிவோல்ஃப், ஹாம் மற்றும் பேக்கன் போன்ற பன்றி இறைச்சி உணவுகள் சில மாணவர்களின் மத உணர்வுகளை பாதிக்கின்றன என்பதால்,அவற்றை தவிர்க்க பாடசாலை கேட்டதாக கூறியுள்ளார்.
சிலர் இதை மத அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பாடசாலைகளில் மதச்சார்பற்ற சூழலை பாதிக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், கனேடிய பாடசாலைகளில் மத உணர்வுகள், உணவுப் பழக்கங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.