Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு நோய்களுக்கும் தீர்வு தரும் பவளமல்லி; எப்படி...?

பல்வேறு நோய்களுக்கும் தீர்வு தரும் பவளமல்லி; எப்படி...?

17 புரட்டாசி 2020 வியாழன் 12:20 | பார்வைகள் : 12485


 சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய்  நீக்கியாக விளங்குகிறது.

 
பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.  
 
பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். இத்தகைய மூலிகை குணமுடைய பவளமல்லி பல்வேறு வீடுகளில் அழகுப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
 
வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
 
பவளமல்லி தேநீர் தயாரிக்க: பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.
 
இடுப்பு வலி பெண்கள் பலருக்கும் தீராத பிரச்சனை. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின்  இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்