கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தி.மு.க.,வுக்கு சாதகமா; பின்னடைவா?

14 ஐப்பசி 2025 செவ்வாய் 13:35 | பார்வைகள் : 148
கரூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியல் ரீதியாக தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையுமா அல்லது விசாரணையில் வெளி வரும் உண்மையால் பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்., 27ல், கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 11 குழந்தைகள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர்.
அதிரடி உத்தரவு
தற்போது, கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சி.பி.ஐ., விசாரணை என்பது, மத்திய அரசின் கண் அசைவில் நடக்கக்கூடும் என்ற அச்சம், தி.மு.க., தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, பா.ஜ., பிடியில், த.வெ.க., இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகி உள்ளது.
வரு ம் சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிட்டால் அல்லது அ.தி.மு.க.,வுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சிறுபான்மையினர், தலித் சமுதாயங்களின் ஓட்டுகள், த.வெ.க., கூட்டணிக்கு கிடைக்கும்; அ து அக்கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி அமையும்பட்சத்தில், சிறுபான்மை சமுதாயத்தினரும், தலித் சமுதாயத்தினரும் அக்கூட்டணிக்கு ஓட்டு அளிக்கும் வாய்ப்புகள் குறையும்.
அது, தி.மு.க., தன் வழக்கமான சிறுபான்மையினர், தலித் சமுதாயத்தினர் ஓட்டுகளை தக்க வைக்க உதவும், கரூர் சம்பவத்திற்கு முன், விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுற்றி வந்தது ஏன் என்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வரலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று உடல்களைதான், அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும்போது, எப்படி 40 பேர் உடல்களுக்கு, அடுத்தடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த உண்மையும் அம்பலமாகும்.
இதன் வாயிலாக, உண்மையான குற்றவாளிகளை சி.பி.ஐ., கைது செய்து, அது தொடர்பான விசாரணையை, வரும் சட்டசபை தேர்தல் வரை தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது.
கண்டிப்பானவர் ஆளும்கட்சிக்கு எதிராக உண்மைகள் வெளிவரும்பட்சத்தில், எதிர்க்கட்சிகளின் பிரசார பலத்தால், அது தேர்தலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
அஜோய் ரஸ்தோகி கண்டிப்பானவர் என்பதால், தி.மு.க., தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.