அமெரிக்காவின் சுற்றுலா விசா விதிமுறைக்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்பிரிக்க நாடு

14 ஐப்பசி 2025 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 104
அமெரிக்காவின் சுற்றுலா விசா விதிமுறைக்கு பதிலடி அளிக்கும் விதமாக ஆப்பிரிக்க நாடான மாலி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி (Mali), சுற்றுலா மற்றும் வணிக விசா பெறும் அமெரிக்க குடிமக்களிடம் 10,000 டொலர் (7,500 பவுண்டு) வரை பிணைத் தொகையை கட்டாயமாக விதிக்க முடிவு செய்துள்ளது.
இது அமெரிக்கா மேற்கொண்ட புதிய விசா கட்டுப்பாடுகளுக்கு பதிலடி நடவடிக்கை ஆகும்.
மாலியின் வெளிவிவகார அமைச்சகம், "அமெரிக்கா ஒருபக்கமாக இந்த கட்டுப்பாட்டை விதித்ததால், அதே மாதிரியான விசா திட்டத்தை நங்கள் அமெரிக்க பிறக்கைகளுக்காக உருவாக்குகிறோம்" என தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம், இந்த கட்டுப்பாடு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாகவே இருக்கிறது என விளக்கம் அளித்திருந்தது.
இரு நாடுகளும் சமீபத்தில் தங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சி செய்திருந்தன. ஜூலை மாதத்தில், அமெரிக்க அதிகாரிகள் மாலிக்கு சென்றிருந்தபோது, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலியின் தங்கம் மற்றும் லித்தியம் வளங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு மாலியில் நடந்த இராணுவ புரட்சிக்குப் பின்னர், ஜெனரல் காசிமி கோயிட்டா ஆட்சியை கைப்பற்றினார்.
அவர் ரஷ்யாவுடன் நெருக்கம் ஏற்படுத்தி, பிரான்ஸ் படைகளை வெளியேற்றினார். ரஷ்யாவின் வாக்னர் குழுவைக் கொண்டு வந்தார். தற்போது அந்த குழுவை Africa Corps என்ற புதிய அமைப்பு மாற்றியுள்ளது.
இந்த சூழலில், மாலியின் புதிய விசா கட்டுப்பாடு, அமெரிக்காவின் குடிவரவு கொள்கைக்கு எதிரான முக்கிய பதிலடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.