தேங்காய் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

13 ஐப்பசி 2025 திங்கள் 18:17 | பார்வைகள் : 1162
உடைக்கப்பட்ட தேங்காய் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவை மீளப்பெறப்படுகின்றன.
உடைக்கப்பட்ட மற்றும் துருவப்பட்ட தேங்காய்களில் சல்மோனெல்லாம் பக்டீரியா பரவுவதாக தெரிவிக்கப்பட்டு அவை மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Leclerc, Carrefour, மற்றும் Intermarché போன்ற அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட தொகுதி இலக்கம் 3570250008493 கொண்ட தேங்காய் பொதிகள் மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மோனெல்லா பக்டீரியா மூலம் வாந்தி, காய்ச்சல், தலையிடி போன்ற உபாதைகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 7 நாட்களுக்குள் அதனை உட்கொண்டவர்கள், மேற்கண்ட உபாதைகளை எதிர்கொண்டால் மருத்துவரை நாடவும் எனவும் அறிசுறுத்தப்பட்டுள்ளது.