Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை... கனேடிய நிபுணர்கள்
13 ஐப்பசி 2025 திங்கள் 13:15 | பார்வைகள் : 1053
அமெரிக்க மாகாணமொன்று Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், கனேடிய நிபுணர்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மக்களும் Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை குறித்து கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என சமையல் கலை நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த Non-stick சமையல் பாத்திரங்களில், perfluoroalkyl மற்றும் polyfluoroalkyl என்னும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அவை PFAS என அழைக்கப்படுகின்றன.
இந்த PFAS வகை ரசாயனங்கள், forever chemicals, அதாவது, நிலைத்து நீடிக்கும் அல்லது அழியாத ரசாயனங்கள் என அழைக்கப்படுகின்றன. காரணம், அவை இயற்கையாக மண்ணில் சிதைவடைவதில்லை.
விடயம் என்னவென்றால், இந்த PFAS வகை ரசாயனங்கள், Non-stick சமையல் பாத்திரங்களில் மட்டும் இல்லை. அவை, அழகுப்பொருட்கள், உணவு பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்தும் பெட்டிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிலும் உள்ளன.
இந்த PFAS வகை ரசாயனங்கள், மனிதனின் கல்லீரல், நோயெதிர்ப்பு மண்டலம், இனப்பெருக்க மண்டலம், நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், தைராய்டு மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கக்கூடியவை என்கிறது கனடா சுகாதார அமைப்பான Health Canada அமைப்பு.
கலிபோர்னியாவில் Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கைகளைத் துவக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மக்களும் Non-stick சமையல் பாத்திரங்களுக்கு தடை குறித்து கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என சமையல் கலை நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த Non-stick சமையல் பாத்திரங்களால் லாபம் பார்க்கும் சில சமையல் கலைஞர்கள், Non-stick சமையல் பாத்திரங்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆக, கலிபோர்னியாவில் Non-stick சமையல் பாத்திரங்கள் தடை தொடர்பில் என்ன முடிவெடுக்கப்படப்போகிறது என்பதைப் பொருத்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசும், PFAS வகை ரசாயனங்கள் குறித்து முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan