இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுதலை ஆரம்பம்.... மகிழ்ச்சி மக்கள்
13 ஐப்பசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 856
ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் நாட்டவர்களை விடுவிக்க ஆரம்பமாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், சுமார் 1,200 பேரைக் கொன்றதுடன், 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அவர்களில் இதுவரை 140 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர், 4 பேரை இஸ்ரேல் ராணுவம் மீட்டது.
தற்போது, பிணைக்கைதிகளில் சுமார் 20 பேர் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது.
அத்துடன், 28 இஸ்ரேலியர்களுடைய உடல்கள் ஹமாஸ் வசம் உள்ளன.
அவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலரும் அடக்கம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு பிணைக்கைதிகள் ஏழு பேரை ஹமாஸ் தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல் கட்டமாக ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள், Eitan Mor, Gali Berman, Ziv Berman, Matan Angrest, Omri Miran, Alon Ehal மற்றும் Guy Gilboa Dallal ஆகியோர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிணைக்கைதிகள் விடுதலை செய்தியை அறிந்த இஸ்ரேல் மக்கள் அவர்களை வரவேற்கும் வகையிலான பதாகைகளுடன் டெல் அவிவிலுள்ள பிணைக்கைதிகள் சதுக்கத்தின் முன் கூடி உற்சாகக் குரல் எழுப்பும் காட்சிகள் வெளியாகிவருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan