Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர்

இலங்கையில் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர்

13 ஐப்பசி 2025 திங்கள் 09:01 | பார்வைகள் : 216


1 வயது 8 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக அக்மீமனவைச் சேர்ந்த 65 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து காலி மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. முதல் குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இரண்டாவது குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​2018 ஆம் ஆண்டில், சந்தேக நபர் பக்கத்து வீட்டில் தனது தாயுடன் இருந்த குழந்தையை எங்காவது அழைத்துச் செல்வதாகக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 500,000 ரூபா இழப்பீடு வழங்கவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்