தவெக கொடி விவகாரம் ஆர்வத்தோடு வருகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி பதில்
.jpg)
13 ஐப்பசி 2025 திங்கள் 12:13 | பார்வைகள் : 129
தவெகவில் விருப்பப்பட்டவர்கள் தாமாக வரவேற்பு தருகின்றனர். தலைமையின் ஆணையைப் பெற்று வர வேண்டும் எனவும் கூட நாங்கள் அவர்களிடத்தில் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மூலம் சொன்னோம். ஆனால், அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் அசம்பாவிதத்திற்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்களில் தவெக கொடியை சிலர் தூக்கிப் பிடித்தபடி அவருக்கு வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.
இது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிக்கு பிள்ளையார் சுழி” என்றும் கூட பேசியிருந்தார். அதிமுக கூட்டணிக்கு தவெக செல்கிறதா? தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருகிறார்களா என பல்வேறு கேள்விகளும் பல்வேறு தரப்பினர் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.