இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது: நயினார் நாகேந்திரன்
13 ஐப்பசி 2025 திங்கள் 08:18 | பார்வைகள் : 547
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் தலைவர் (முதல்வர்) ஆவார்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மதுரையில் இன்று (அக் 12) தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது, தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். இபிஎஸ் முதல்வர் ஆவார். பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். தூய்மை பணியாளர்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதிற்கு தண்டிக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்றமே கேள்வி கேட்கும் ஒரே ஆட்சியாக தான் திமுக இருக்கிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். அது எப்படி நடந்தது அரசு மற்றும் போலீசாரின் குற்றம். காவல் துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் வைத்து இருக்கிறார். ஆனால் தினம் தினம் படுகொலை. சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெரிய வினோதம். சாராயம் குடித்து இறந்து போனால் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள்.
இன்று முதல் கவுன்ட் டவுன் தொடங்குகிறது. இன்று முதல் நாட்கள் குறிக்கப்படுகிறது. திமுக அரசின் ஆட்சி காலத்தின் நாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆட்சியில் அலங்கோலம் மக்கள் மத்தியில் இருந்து வெகு விரைவில் தீர்க்கப்படும். விரைவில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். எங்களுடைய தலைவராக இபிஎஸ் வருவார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan