சூடானில் துணை இராணுவத்தினர் தாக்குதல் - 53 பேர் உயிரிழப்பு
12 ஐப்பசி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 3671
சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை இராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது.
சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் இலட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர்.
இந்நிலையில் சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை இராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர்.
அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan