Paristamil Navigation Paristamil advert login

எனக்கு வேறு தெரிவில்லை! - பிரதமர் பதவி குறித்து Sébastien Lecornu!!

எனக்கு வேறு தெரிவில்லை! - பிரதமர் பதவி குறித்து Sébastien Lecornu!!

12 ஐப்பசி 2025 ஞாயிறு 07:38 | பார்வைகள் : 950


மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் Sébastien Lecornu மனம் திறந்துள்ளார். ‘எனக்கு வேறு தெரிவு இல்லை!’ என தெரிவித்தார்.

La Tribune ஊடகத்துக்காக அவர் வழங்கிய செவ்வியில் “வெளியேறுவது எனக்கு ஒரு தெளிவான தேர்வாக இருக்கவில்லை. எனக்கு தெரிவுகள் வழங்கப்படவில்லை. எனது பதவி விலகலை மக்ரோன் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறுவது எனும் தெரிவு வழங்கப்படவில்லை!’ என குறிப்பிட்டிருந்தார்.

“அனைத்து கட்சிகளும் இணைப்புடன் செயற்படும் ஒரு அரசாங்கம் தேவை. இந்த இயந்திரத்தை இயக்க, நாட்டுக்கும் அதுவே தேவை!” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்