அணையா விளக்கின் மேல்பகுதியில் தவறி விழுந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டார்!!
11 ஐப்பசி 2025 சனி 18:58 | பார்வைகள் : 6041
பரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற l’Arc de Triomphe நினைவுச்சின்னத்தின் மேல்பகுதியில் இருந்து ஒரு 70 வயதான நபர் வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தார். அவர் தீவிரமாக காயமடைந்ததால், அவசர சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் நினைவுச்சின்னத்தின் அமைப்பினால், அவரை படிக்கட்டுகள் வழியாக கீழே இறக்க முடியவில்லை.
இதனால், GRIMP என்ற சிறப்பு மீட்பு குழுவினர் முயற்சித்தபோதிலும், ஹெலிகாப்டர் மூலம் மேலே தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தீர்வே முடிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அபூர்வமான மீட்பு நடவடிக்கையால் பரிசின் வானத்தில் அபூர்வ காட்சிகள் உருவானது. தற்போது அவருடைய நிலைமையைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து இல்லை என தீயணைப்பு வீரர்கள் உறுதியளித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan