இஸ்ரேலில் 200 துருப்புகளை களமிறக்கிய அமெரிக்கா ….

11 ஐப்பசி 2025 சனி 08:38 | பார்வைகள் : 281
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்கா தங்களது துருப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிப்பதற்காக மத்திய கிழக்கில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200 அமெரிக்க துருப்புகள் இஸ்ரேலுக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
இந்த அமெரிக்க ராணுவ குழுவின் முக்கிய நோக்கம், பல்நாட்டு பணிக்குழுவை நிறுவி அமைதி ஒப்பந்தத்தை ஆதரவளிப்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு கட்டுப்பாட்டு மையம்(Joint Control Center) அல்லது பொது இராணுவ ஒருங்கிணைப்பு மையம்(CIvil-Military Coordination Centre) என்று அழைக்கப்படும் இந்த இராணுவ பணிக்குழு, எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உறுப்பினர்களை உள்ள்டக்கிய கண்காணிப்பு குழுவாகும்.
இது அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையின் அறிவுறுத்தலின் கீழ் செயல்படும்.
இந்த குழுவின் முதன்மை நோக்கமாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னேற்றங்களை கண்காணிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை உறுதிப்படுத்தல் ஆகும்.
இதில் பங்கேற்றுள்ள அமெரிக்க படைகள் காசாவுக்கு நுழையாது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.