France Travail அலுவலகங்கள் மீது தாக்குதல்! - ஒருவர் கைது!!
10 ஐப்பசி 2025 வெள்ளி 17:15 | பார்வைகள் : 2761
France Travail அலுவலகங்கள் மீது யூத எதிர்ப்பு வாசனங்களை எழுதிய ஹிட்லரின் தீவிர விசுவாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஒக்டோபர் 9 ஆம் திகதி, வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். Lorient (Morbihan) நகரில் வசிக்கும் குறித்த நபர் உடனடியாக இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் மிக தீவிரமான மனநிலையுடன் இருப்பதாகவும், யூதர்கள் மீது தீராத வெறுப்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, France Travail அலுவலகங்களை குறிவைத்து அவர் இதுபோன்ற தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan