Paristamil Navigation Paristamil advert login

டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி

டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி

8 ஐப்பசி 2025 புதன் 11:51 | பார்வைகள் : 167


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி டிரம்ப் என கனடா பிரதமர் மார்க் கார்னி பாராட்டினார்.

அமெரிக்காவிற்கு டிரம்ப் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி சென்று இருந்தார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தபோது கனடா பிரதமர் மார்க் கார்னியை கை குலுக்கி ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றார்.

அப்போது கனடா பிரதமர் டிரம்ப் இடம் நகைச்சுவையைச் செய்தார். 'நான் உங்களுக்காக சிவப்பு நிறத்தில் டைய் அணிந்து உள்ளேன்'' என மார்க் கார்னி கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

சந்திப்பின் போது, ​​டிரம்ப் கார்னியுடன் நட்புரீதியான தொனியில் பேசினார்.

ஏப்ரல் மாதம் பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகைக்கு இரண்டாவது முறையாக மார்க் கார்னி வருகை தந்துள்ளார்.

ஏற்கனவே சிறந்த தலைவர் கார்னியை டிரம்ப் பலமுறை பாராட்டினார்.

ஜனாதிபதி டிரம்ப், மார்க் கார்னி ஆகிய இருவரும் உறவை வலுப்படுத்துவது, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் மற்றும் இஸ்ரேல்-காசா மோதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்