இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயராக முதல் பெண்மணி
6 ஐப்பசி 2025 திங்கள் 11:16 | பார்வைகள் : 847
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1,400 ஆண்டுகளில் இந்தப் பதவிக்கு தகுதி பெற்ற முதல் பெண் 63 வயதான பிஷப் சாரா முலாலே ஆவார்.
பிரிட்டிஷ் மன்னருக்கு முடிசூட்டுவது போன்ற முக்கியமான கடமைகளைச் செய்யும் கேன்டர்பரி பேராயராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது.
கேன்டர்பரி பேராயர் உலகளாவிய ஆங்கிலிகன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்காவில் உள்ள சில கடுமையான ஆங்கிலிக்க குழுக்கள், பெண்கள் ஆயராக இருப்பதை எதிர்த்து அவரது நியமனத்தை விமர்சித்துள்ளன.
63 வயதான சாரா முல்லல்லி, முன்னாள் நர்சிங் அதிகாரியாகவும், 2000-களில் இங்கிலாந்தின் Chief Nursing Officer-ஆக பணியாற்றியுள்ளார். 2002-ஆம் ஆண்டு பாதிரியாராக ஆணையிடப்பட்டு, 2015-ல் ஆயராக உயர்ந்தார்.
2026 மார்ச் மாதத்தில் Canterbury Cathedral-ல் நடைபெறும் விழாவில் அவர் பதவியேற்கவுள்ளார். இது ஆங்கிலிக்க திருச்சபையின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan