குடிமக்களின் பணத்தில் மேயரின் ஆடைகள்: 35,000 யூரோ சர்ச்சை!!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 21:39 | பார்வைகள் : 597
பரிஸ் 8ஆம் வட்டார மேயர் ஜீன் த’ஓட்டசெர்ர் (Jeanne d’Hauteserre), தனது ஆடைகள் வாங்க 35,000 யூரோ செலவழித்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மேயருக்கும் மாதம் 990 யூரோக்கள் செலவுத்தொகை ஒதுக்கப்படுகிறது என்பதையும், தனது அந்த தொகையை நன்றாகவும் அழகாகவும் இருக்க உடைகள் வாங்க பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசம்பரில் மட்டும் 7,000 யூரோக்கள் செலவழித்ததாகவும், பெரும்பாலும் உயர்தர பிராண்டுகளில் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த உரையாடல் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என அவர் கூறியதும், வரிவிதிப்பைத் தன் ஆடைகள் வாங்க பயன்படுத்தியதை நியாயப்படுத்த முயன்றதாகக் கருதப்பட்டது. அதே சமயம், குறைந்த வருமானம் பெறும் மக்கள் கோபமடையலாம் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தன்னுடைய சிறப்புரிமைகளை நீக்குவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், இது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இவரது கருத்துக்கள் ஒரு பாம்பே தன்னைத் தானே கடிக்கும் நிலைதான்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1