துனிசிய ஜனாதிபதியை அவமதித்தவருக்கு மரண தண்டனை

5 ஐப்பசி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 215
சமூக ஊடகங்களில் துனிசிய ஜனாதிபதியை அவமதித்ததற்காக அந்நாட்டு நீதிமன்றம், ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு துனிசியாவில் முன்னெப்போதும் இல்லாதது என்று கூறப்படுகிறது.
56 வயதான கல்வி குறைவான சாதாரண தொழிலாளிக்கு இந்த மரண தண்டனை வழங்கப்பட்டது. துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர், இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்கும் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
2021இல் ஜனாதிபதி கைஸ் சயீத் ஆட்சியில் அமைந்ததிலிருந்து, துனிசியாவில் கருத்து சுதந்திரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது கட்சிக்காரருக்கு ஃபேஸ்புக் பதிவுகளுக்காக மரண தண்டனை விதித்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
இது அதிர்ச்சியூட்டும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத முடிவு என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
துனிசிய நீதிமன்றங்கள் பல சமயங்களில் மரண தண்டனை விதித்திருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1