கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தபடி பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

5 ஐப்பசி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 267
பொதுவாக பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க IUD என அழைக்கப்படும் T வடிவிலான தாமிர கர்ப்ப தடுப்பு சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
இது 99% வெற்றி விகிதத்துடன் சிறந்த பிறப்பு கட்டுப்பாடு சாதனமாக செயல்படுகிறது.
பிரேசிலை சேர்ந்த Queidy Araujo de Oliveira என்ற பெண், கர்ப்பம் தரிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை IUD பயன்படுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் இவர் வழக்கமாக பரிசோதனை செய்த போது, கர்ப்பமடைந்திருப்பது தெரிய வந்தது.
IUD சாதனம் அப்படியே இருந்த நிலையில், அதை அகற்றுவது கர்ப்பத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அப்படியே இருந்துள்ளது.
இதன் காரணமாக ரத்த போக்கு போன்ற சிரமங்களை அனுபவித்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் ஆரோக்கியமான ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்த குழந்தைக்கு Matheus Gabriel என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் தாயின் கருப்பையில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தபடி தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மருத்துவர் Rodrigues "எனது வெற்றிக் கோப்பையை ஏந்தியிருக்கிறேன்: என்னைக் கையாள முடியாத IUD" என பதிவிட்டுள்ளார்.
கர்ப்ப தடுப்பு சாதனத்தையும் மீறி, குழந்தை பிறந்தது எப்படி என மருத்துவர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1