நேபாளத்தில் கன மழை- 47 பேர் உயிரிழப்பு
5 ஐப்பசி 2025 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 586
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் ஹெலிகொப்டரை அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இருக்கின்றனர்.
இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
இதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan