உளவு பார்க்க ஆள் சேர்த்த பாக்.,: துாதரக சதி அம்பலம்
5 ஐப்பசி 2025 ஞாயிறு 10:09 | பார்வைகள் : 3003
டில்லியில் இயங்கி வரும் பாகிஸ்தான் துாதரகம், உளவு பார்க்கும் அமைப்பாக செயல்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் பல்வால் பகுதியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் வாசிம் அக்ரம் என்பவரை கைது செய்ததன் வாயிலாக, பாகிஸ்தான் துாதரகம் இந்திய ராணுவத்தை உளவு பார்க்க ஆட்களை நியமித்த தகவல் அம்பலமாகி இருக்கிற து.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ளன. இதனால், எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்களின் உறவினர்கள் பலர், பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.
அவர்களை காண, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திடம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சிலரை, தங்களது உளவுச் செயல்களுக்கு பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இ தேபோல், கைதான வாசிம் அக்ரமை யும் தங்களது துாண்டிலில் விழ வைத்து, உளவு பார்ப்பதற்கு பாக்., அதிகாரிகள் பயன் படுத்தி இருக்கின்றனர்.
பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஜாபருக்கு தரவுகளை தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளில் அக்ரம் ஈ டுபட்டது, நம் உளவுத் துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், வாசிம் அக்ரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் அம்பலமானதால், டில்லியில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள் ஜாபர், டேனிஷ் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், புதிதாக அந்த பதவிக்கு வந்த அதிகாரிகளும் பழைய படியே உளவு பார்ப்பதற்கு ஆட்களை சேர்ப்பதற்கான வலை யை விரித்து வருவது தெரிய வந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan