இலங்கை முழுவதும் சிரற்ற காலநிலை - பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
4 ஐப்பசி 2025 சனி 14:58 | பார்வைகள் : 2718
பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் அபாயத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan