சுவிஸ் நீர்நிலைகளில் எக்கச்சக்கமான பூச்சிக்கொல்லிகள்- ஆய்வில் கண்டுபிடிப்பு

4 ஐப்பசி 2025 சனி 13:05 | பார்வைகள் : 172
சுவிஸ் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐந்து நீரோடைகளில் 135 பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
National Surface Water Quality Monitoring Programme (Nawa) என்னும் திட்டத்தின்கீழ், சுவிட்சர்லாந்திலுள்ள நீர்நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுகளின் முடிவுகள், ஐந்து நீரோடைகளில் 135 பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
மேலும், அவற்றில் 23 பூச்சிக்கொல்லிகள், தண்ணீரில் வாழும் மீன்கள், பூச்சிகளின் லார்வாக்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள், வயல்களிலிருந்து மழைநீர் வழிந்தோடி நீர்நிலைகளில் கலப்பதன் மூலம் நீர்நிலைகளில் கலந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், செல்லப்பிராணிகள் உடலில் வாழும் உன்னிப்பூச்சிகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் fipronil போன்ற ஆபத்தான பூச்சிக்கொல்லிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நீர் நிலைகளில் கலந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1