பரிஸ் : Chanel காட்சியறை கொள்ளை! - நால்வர் தலைமறைவு!!
2 ஐப்பசி 2025 வியாழன் 18:13 | பார்வைகள் : 7656
பரிசில் உள்ள Chanel காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்படுள்ளன.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள rue Royale வீதியில் உள்ள Chanel காட்சியறை, இன்று ஒக்டோபர் 2 ஆம் திகதி அதிகாலை 4.45 மணிக்கு உடைக்கப்பட்டது. SUV மகிழுந்து ஒன்றின் மூலம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் , அங்கிருந்த பைகள், தோல் ஆடைகள் போன்ற பல பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் மொத்தம் நால்வர் எனவும், அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan