அலாஸ்காவில் F-35 போர் விமான விபத்து- 50 நிமிடங்கள் போராடிய பைலட்

29 ஆவணி 2025 வெள்ளி 06:41 | பார்வைகள் : 294
அமெரிக்க விமானப்படையின் F-35 போர் விமானம் அலஸ்க்காவின் Eielson விமான தளத்தில் விபத்துக்குள்ளானது.
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த போர் விமானம் முற்றிலுமாக அழிந்தது.
அதில் இருந்த பைலட் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதனை இறக்க முயன்றபோது முன் சக்கரம் தவறான கோணத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் விமானத்தின் கணினி அமைப்புகள் விமானம் தரையில் இருப்பதாக புரிந்துகொண்ட பல்வேறு செயலிழப்புகளை ஏற்படுத்தியது.
பைலட், வழக்கமான சோதனை பட்டியல்களில் தீர்வு கிடைக்காததால், Lockheed Martin நிறுவனத்தின் 5 பொறியாளர்களுடன் 50 நிமிடங்கள் விமானத்தில் இருந்தபடியே தொலைபேசியில் ஆலோசனை செய்தார்.
இதில் landing gear நிபுணர்கள் பறக்கும் பாதுக்காப்பு பொறியாளர் மற்றும் மூத்த மென்பொருள் பொறியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
விசாரணையில், F-35 விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் பனி உருவானது என்பதே முக்கிய காரணம் என தெரியவந்தது. இது லெண்டிங் கியர் செயலிழப்புக்கு காரணமாக அமைந்தது.
விமானம் நேராக கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.