Paristamil Navigation Paristamil advert login

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

28 ஆவணி 2025 வியாழன் 10:12 | பார்வைகள் : 187


ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது; பாகிஸ்தானுடன் இருந்த தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ராவி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக கடலில் சேர்கிறது.

எனவே, மனிதாபிமான நடவடிக்கையாக மத்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்