Paristamil Navigation Paristamil advert login

தேர்தலில் போட்டியிடும் தகுதி வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தேர்தலில் போட்டியிடும் தகுதி வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

27 ஆவணி 2025 புதன் 12:50 | பார்வைகள் : 128


தேர்தல்களில் போட்டியிடும் வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் புதியதாக கட்டப்பட்ட விடுதிகள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது;

21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஆகி விடுகின்றனர். மாவட்டங்களில் அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர். 21 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஓட்டுரிமையை அளிக்கும் வகையில் அரசியலைமைப்புச் சட்டத்தை தந்தவர் அம்பேத்கர்.

ஓட்டு போடுபவர்களுக்கான தகுதி உடைய வயது 21 என்பதை முன்னாள் பிரதமர் ராஜிவ் குறைத்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 21 வயதில் பணியில் சேருகின்றனர்.அப்படி இருக்கும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் வயது 21 ஆக ஏன் இருக்க முடியாது? இளைய தலைமுறையின் தலைமை இந்த நாட்டுக்கு தேவை.

போட்டியிடும் வயதை குறைக்க அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் திருத்த வேண்டும். வேட்பாளர்களின் தகுதி வயதைக் குறைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்லிமெண்டில் ஒருமித்த கருத்து உள்ளது.

பார்லி. நிலைக்குழுவின் அறிக்கையில் தேர்தலில் போட்டியிடும் குறைந்த பட்ச வயதை 18 ஆக குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். தெலுங்கானா எம்எல்ஏக்களின் சராசரி வயது 52 முதல் 57 வரை ஆகும். மொத்தமுள்ள 119 எம்எல்ஏக்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களே 60 சதவீதம் பேர் உள்ளனர்.

2024ல் 3 பேர் மட்டுமே 25 வயதுடையவர்கள். எனவே தகுதி வயதை 4 ஆண்டுகள் குறைப்பது கூட அவையின் அமைப்பை மாற்றக்கூடும். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குதில் தெலுங்கானா அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்