ராகுல் யாத்திரையில் பங்கேற்க பீஹார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

27 ஆவணி 2025 புதன் 10:50 | பார்வைகள் : 151
பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலின் யாத்திரையில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.
பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று 'இண்டி' கூட்டணி தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.
பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல், தன்னுடைய நடைபயணத்தில், கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பிய பேரில், முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ஜோடோ' யாத்திரையை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3