Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு; பிஜி பிரதமர் பாராட்டு

அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு; பிஜி பிரதமர் பாராட்டு

27 ஆவணி 2025 புதன் 09:50 | பார்வைகள் : 1072


அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிக்கும் வல்லமை மோடிக்கு உண்டு என்று பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா பாராட்டி உள்ளார்.

உலக நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு இன்று(ஆக.27) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறி இருந்தார்.

இந் நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா, பிரதமர் மோடியை சந்தித்தார். இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. பின்னர், உலக விவகார கவுன்சில் (ICWA) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிதிவேனி லிகமமடா ரபுகா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது;

இப்போது அங்கு(அமெரிக்கா) நடக்கும் விஷயங்கள் அமெரிக்காவுடனான உறவை பாதிக்கிறது. சமீபத்திய கட்டண அறிவிப்புகள் பற்றி நான் அவரிடம்(பிரதமர் மோடி) பேசினேன்.

யாரோ ஒருவர் உங்களால் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், அப்படியான அசௌகரியங்களை தாங்கும் வல்லமை கொண்டவர்.

இவ்வாறு ரபுகா பேசினார்.

முன்னதாக, டில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்