RATP பேருந்து மோதி சிறுமி உயிருக்கு போராட்டம்!!
26 ஆவணி 2025 செவ்வாய் 21:43 | பார்வைகள் : 4926
பரிசில் பொது போக்குவரத்து பேருந்து ஒன்றில் மோதி சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Philharmonie de Paris பகுதிக்கு மிக அருகே, நேற்று ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை பிற்பகல் 5.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீதிக்கு அருகே உள்ள சிறிய பகுதி ஒன்றில் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்ததாகவும், வீதிக்கு வந்த பந்தை எடுப்பதற்காக ஓடிவந்து, பேருந்துக்குள் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan