ராமேஸ்வரம் ஏர்போர்ட்டுக்கு ஐந்து இடங்களில் விரைவில் ஆய்வு

26 ஆவணி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 170
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களை பார்வையிட, உலகம் முழுதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
கடல் உணவு அவர்கள், சாலை, ரயில் வாயிலாக, ராமேஸ்வரம் வர வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் அதிகமாகிறது.
ராமநாதபுரத்தில் உப்பு, கடல் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. எனவே, அம்மாவட்ட பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பயணியரின் பயண நேரத்தை குறைக்கவும், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.
விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 500 - 700 ஏக்கர் நிலம் உள்ள ஐந்து இடங்களை, அரசு அடையாளம் கண்டுள்ளது.
ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம்; கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
அரசு நிலம் இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்திற்கு இடம் அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது.
எனினும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி அதிகாரிகளுடன் இணைந்து, பல ஆண்டுகளுக்கு முன் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் உட்பட பல்வேறு வகைப்பாட்டைச் சேர்ந்த, ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றில், அரசுக்கு சொந்தமான நிலம்தான் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3