Paristamil Navigation Paristamil advert login

வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க எம்.பி.,க்களுடன் இந்திய துாதர் பேச்சு

வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க எம்.பி.,க்களுடன் இந்திய துாதர் பேச்சு

25 ஆவணி 2025 திங்கள் 13:00 | பார்வைகள் : 4615


அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்களுக்கு வரும் 27 முதல் 50 சதவீத வரி அமலுக்கு வர உள்ள நிலையில், அது தொடர்பாக அந்நாட்டு எம்.பி.,க்கள் 23 பேரை சந்தித்து அமெரிக்கவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய- - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ல் இருந்து அமலில் உள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி என்ற கூடுதல் 25 சதவீத வரி, வரும் 27 முதல் அமலுக்கு வருகிறது.


ரஷ்ய கச்சா எண்ணெய்யை தேசிய நலன் மற்றும் சந்தை இயக்கத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஆதரவு கோரி அந்நாட்டு எம்.பி.,க்களை அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா சந்தித்து வருகிறார். இதுவரை, 23 எம்.பி.,க்களை சந்தித்து பேசியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்