பிரதமர் பிரோன்சுவா பய்ரூவின் முக்கிய செய்தியறிவிப்பு!

24 ஆவணி 2025 ஞாயிறு 12:40 | பார்வைகள் : 626
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ ஓகஸ்ட் 25 திங்கள்கிழமை அதாவது நாளை மாலை 16:00 மணிக்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேச உள்ளார். 2026 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிப்பதோடு, அரசியல் பிரிவினர்களுக்கான சலுகைகளை நீக்குவது குறித்தும் அறிவிக்க உள்ளார்.
முக்கிய அம்சங்களாக
2026 ஆம் ஆண்டிற்கான 44 பில்லியன் யூரோ சேமிப்பு திட்டம்
சமூக செலவீனங்கள் கட்டுப்பாடு மற்றும் சமூக மாதிரி மறு வடிவமைப்பு
இரண்டு விடுமுறை நாட்கள் நீக்கப்படும்
அரசியல்வாதிகளின் சலுகைகள் குறைக்கப்படும்
அரசியல் சூழல்
செப்டம்பர் 23 அன்று தேசிய சட்டமன்றத்தில் அவநம்பிக்கை தீர்மானம் முன்வைக்கப்படும்
ஜோன்;-லூக் மெலோன்சோன் செப்டம்பர் 10 அன்று பொதுவுடமை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் திட்டங்களை கண்காணித்து வருகின்றன
எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்
வேலையின்மை காப்பீட்டு சீர்திருத்தம்
ஓய்வூதியம் மற்றும் சமூக நலம் தொடர்பான நடவடிக்கைகள்
ஐந்தாவது வார ஊதிய விடுப்பை பணமாக மாற்றும் திட்டம்
தொழிற்துறை அமைச்சர் ஆஸ்த்திரித் பானோசியன்-பூவே (யுளவசனை Pயழெளலயn-டீழரஎநவ) செப்டம்பர் 2 அன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களை சந்திப்பார். ஐந்தாவது வார விடுப்பை பணமாக மாற்றும் திட்டம் 'நியமனங்களை எளிதாக்கும்' மற்றும் 'வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்' என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3