Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மீண்டும் மற்றுமொரு தாக்குதல்!!

பரிஸ் : மீண்டும் மற்றுமொரு தாக்குதல்!!

24 ஆவணி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 836


சனிக்கிழமை காலை Porte de Vanves பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் அறிந்ததே. இந்நிலையில், l’Hôtel-de-Ville இற்கு அருகே இதேபோன்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவமும் பதிவாகியுள்ளது.

அதிகாலை 5.30 மணி அளவில் Rue Saint-Martin பகுதியில் நின்றிருந்த பெண் ஒருவரை நோக்கி கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதை அடுத்து அவர் அச்சத்தில் உறைந்துள்ளார். காவல்துறையினரையும் அழைத்துள்ளார். அவரை பின் தொடர்ந்த மூன்று ஆண்களே அப்பெண் மீது கற்களை வீசியுள்ளனர்.

அப்போது அப்பெண்ணுக்கு உதவும் நோக்கில் அங்கு வந்த ஆண் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அத்தோடு அப்பெண்ணையும் கத்தியால் தாக்கியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்தினை வந்தடைந்தபோது, ஆயுததாரிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்